நிறைவடைந்த 'விக்ரம்' படப்பிடிப்பு: லோகேஷை மகிழ்வித்த கமல்ஹாசன்

நிறைவடைந்த 'விக்ரம்' படப்பிடிப்பு: லோகேஷை மகிழ்வித்த கமல்ஹாசன்

நிறைவடைந்த 'விக்ரம்' படப்பிடிப்பு: லோகேஷை மகிழ்வித்த கமல்ஹாசன்
Published on

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காகவே, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் கமல்ஹாசன். இந்த நிலையில், தற்போது ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கமல்ஹாசன்,லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டப் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com