”அன்புத் தம்பி சீமான் தமிழர் நலனுக்காக தளராமல் உழைப்பவர்” - கமல்ஹாசன்

”அன்புத் தம்பி சீமான் தமிழர் நலனுக்காக தளராமல் உழைப்பவர்” - கமல்ஹாசன்

”அன்புத் தம்பி சீமான் தமிழர் நலனுக்காக தளராமல் உழைப்பவர்” - கமல்ஹாசன்
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 55 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ”இளைஞர்களின் அரசியல் ஆசான், உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை, நாளைய தமிழகம். மகன் சீமானுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில்,

 ”தமிழர் நலனுக்காகத் தளராத தன்முனைப்புடன் உழைப்பவர், மாற்றம் வேண்டுமென ஆற்றலுடன் முன் செல்லும் அன்புத் தம்பி செந்தமிழன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com