கமல்ஹாசன் பிறந்தநாள் பரிசு: துப்பாக்கி குண்டுகளால் தெறிக்கவிடும் ‘விக்ரம்’ கிளிம்ப்ஸ்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
நாளை நடிகர் கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக ‘விக்ரம்’ படக்குழு முன்னோட்ட வீடியோ எனப்படும் கிளிம்ப்ஸை தற்போது வெளியிட்டிருக்கிறது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று நிறைவடைந்தது.
இந்த நிலையில், தற்போது கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. வீடியோவில், சிறையில் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் தெறிக்க சக கைதிகளை கமல்ஹாசன் செம்ம கெத்தாக காப்பாற்றுகிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் ‘விக்ரம்... விக்ரம்’ பாடல் பின்னணியில் ஒலித்து கவனம் ஈர்க்கிறது கிளிம்ப்ஸ்.