தக் லைஃப்
தக் லைஃப்முகநூல்

கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு; ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு!

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தக் லைஃப் பட ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Published on

மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் THUG LIFE . பல்வேறு மொழிகளில் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் தக் லைஃப் பட ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் கமலஹாசன் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "சிவராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் உங்கள் மொழி (கன்னடம்). நீங்களும் அதில் உட்படுவீர்கள்." என்று தெரிவித்தார் .

இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தாய்மொழியை நேசிக்க வேண்டும். ஆனால் அதற்காக பிற மொழிகளை அவமதிப்பது அநாகரீகமான செயல். குறிப்பாக கலைஞர்கள் ஒவ்வொரு மொழியையும் மதிக்கும் பண்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் நடித்துள்ள நடிகர் கமல்ஹாசன், தனது தமிழ் மொழியை போற்றுவதற்காக நடிகர் சிவராஜ்குமாரையும் சேர்த்து கன்னடத்தை அவமதித்திருப்பது ஆணவம் மற்றும் ஆணவத்தின் உச்சம். ஒரு மொழியிலிருந்து எந்த மொழி பிறந்தது என்பதை வரையறுக்க கமல்ஹாசன் வரலாற்றாசிரியர் அல்ல.

தக் லைஃப்
ஆக்கிரமிப்பு அகற்றம் - மனுதாரர் மீது தாக்குதல்... சிசிடிவி காட்சி!

2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது கன்னட மொழி. தென்னிந்தியாவிற்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இந்து மதத்தை அவமதித்து, மத உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறார். இப்போது, 6.5 கோடி கன்னடர்களின் சுயமரியாதையை புண்படுத்தி கன்னடத்தை அவமதித்துள்ளார். கமல்ஹாசன் உடனடியாக கன்னட மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைப்' படத்தின் பேனரை கன்னட அமைப்பினர் கிழித்து அகற்றினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com