\
கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக தலைமுடியை புற்றுநோயாளிகளுக்காக தானம் அளித்த ரசிகர்

கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக தலைமுடியை புற்றுநோயாளிகளுக்காக தானம் அளித்த ரசிகர்

கமல்ஹாசன் பிறந்தநாளுக்காக தலைமுடியை புற்றுநோயாளிகளுக்காக தானம் அளித்த ரசிகர்
Published on

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் உடல் தானமும் புற்றுநோயாளிகளுக்காக தனது தலைமுடியை மொட்டையடித்தும் தானம் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 7 ஆம் தேதி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் முழுக்க அவரது ரசிகர்களும் தொண்டர்களும் உணவு அளித்தல், ஏழைகளுக்கு உதவிப்பொருட்கள் வழங்குதல் என்று பல்வேறு உதவிகளை செய்தார்கள். அப்படித்தான், புதுச்சேரியில் வசிக்கும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினருமான மஹின் பார்வத் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி புற்றுநோயாளிகளுக்காக தனது தலை முடியை மொட்டையடித்து தானம் செய்துள்ளார்.

அதோடு, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு தனது உடலை தானம் அளிப்பதாகவும் எழுதிக்கொடுத்துள்ளார்.

அவரது, செயலை கமல்ஹாசன் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதனை, மஹின் பார்வத் தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமுடன் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com