’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்
’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்

’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசன் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கிறார்.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான, பணிகள் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வந்தன. இருந்தாலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளதால் 'விக்ரம்' படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் காளிதாஸ் ஜெயராமும் இணைந்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு, காளிதாஸ் ஜெயராம் மகனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com