\
ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’: பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு

ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’: பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு

ஜீவா நடிக்கும் ‘வரலாறு முக்கியம்’: பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு
Published on: 

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் ‘83’ படம் வெளியானது. இப்படத்தில், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தாக உறுதுணை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் ஜீவா. இன்று ஜீவாவின் 37 வது பிறந்தநாளையொட்டி தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கும் இப்படத்திற்கு ‘வரலாறு முக்கியம்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். நாயகிகளாக காஷ்மீரா பர்தேஷி, ப்ரக்யா நாகரா நடிக்க சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே, தனது அப்பா தயாரிப்பில் ‘ஆசை ஆசையாய்’, ’தித்திக்குதே’, ‘கச்சேரி ஆரம்பம்’ உள்ளிட்டப் படங்களில் ஜீவா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவாவுடன் விடிவி கணேஷ், கே.எஸ் ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com