ஜீவாவுடன் நடிக்கும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே
தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த நாயகி ஷாலினி பாண்டே நடிகர் ஜீவாவுடன் புதுப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ஜீவா. சுந்தர்.சி இயக்கிவரும் ‘கலகலப்பு 2’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜீவா தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் டான் சாண்டி இயக்குகிறார். ‘ரம்’, ‘மசாலா படம்’ ஆகிய படங்களை தயாரித்த விஜய ராகவேந்திரா இப்படத்தை தயாரிக்க உள்ளார். படத்தின் கதாநாயகியாக ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.
ஷாலினி பாண்டேவுடன் ஜீவா இணையவிருக்கும் படம் ஜீவாவுக்கு 29வது படமாகும். இதனையடுத்து ஜீவா ரசிகர்கள் #Jiiva29 என்கிற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இப்படம் காமெடி படமாக தயாராக இருக்கிறது.