கார் ரேஸில் பங்கேற்கும் நடிகர் ஜெய்

கார் ரேஸில் பங்கேற்கும் நடிகர் ஜெய்
கார் ரேஸில் பங்கேற்கும் நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் கார் ரேஸில் பங்கேற்கவுள்ளார்.

நடிகர் ஜெய் நடிப்பில் விரைவில் சுசீந்திரன் இயக்கும் ‘சிவ சிவ’ படம் வெளியாகவுள்ளது. அடுத்ததாக சுந்தர் சி படத்திலும், அட்லீ தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். நடிப்பதோடு, இசையமைப்பாளராகவும் மாறியுள்ள ஜெய் கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்பதிலும் ஆர்வம் கொண்டவர்.

கார் சேகரிப்பில் ஆர்வம் கொண்டவரான ஜெய் எம்.ஆர்.எஃப் மற்றும் ஜா மோட்டார் ஸ்போர்ட்ஸ் இணைந்து நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளார். சென்னையில் மூன்று நாள் நடைபெறும் இப்போட்டி நேற்று முதல் தொடங்கியது.

இன்று தகுதிச்சுற்றும் நாளை பந்தயமும் நடைபெறுகிறது. அவருக்கு ‘எண்ணித்துணிக’ திரைப்பட குழுவும் ஸ்பான்சர் தயாரிப்பாளர் வருண் மணியனின் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனமும் ஸ்பான்சர் செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com