“பாதுகாப்பாக இருங்கள்” - கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ஜெய்

“பாதுகாப்பாக இருங்கள்” - கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ஜெய்
“பாதுகாப்பாக இருங்கள்” - கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ஜெய்

இந்தியாவில் மூன்றாவதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை நடிகர் ஜெய் இன்று செலுத்திக்கொண்டார்.

 ’கொரோனாவிலிருந்து, நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன’ என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்த இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த நிலையில், மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, ஸ்புட்னிக் –வி தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று நடிகர் ஜெய் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர், அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதோடு, அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள்.

நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர் பிரஷாந்த் நீல், விக்னேஷ் சிவன், நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படம் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com