ஹிர்த்திக் ரோஷன் பிறந்தநாள் -  ‘விக்ரம் வேதா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிர்த்திக் ரோஷன் பிறந்தநாள் - ‘விக்ரம் வேதா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிர்த்திக் ரோஷன் பிறந்தநாள் - ‘விக்ரம் வேதா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

ஹிர்த்திக் ரோஷன் பிறந்தநாளையொட்டி ‘விக்ரம் வேதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘விக்ரம் வேதா’ தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும், மாதவன் கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு துபாய்யில் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ’விக்ரம் வேதா’ வெளியாகும் நிலையில், இன்று ஹிர்த்திக் ரோஷனின் பிறந்தநாளையொட்டி படக்குழு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இன்று தனது 48 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஹிர்த்திக் ஸ்டைலிஷ் லுக்கில் ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டலுடன் கவனம் ஈர்க்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com