
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்காக நிதி திரட்டும் முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தொடங்கி வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட ஒகி புயலால் ஏராளமான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒகி புயல் நேரத்தில் கடலில் மாயமான மீனவர்களை மீட்கக்கோரி மீனவர்கள் சார்பில் போராட்டமும் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷூம் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சியை அவர் தொடங்கி வைத்துள்ளார். கிரௌட் பண்ட் என்ற முறையில், எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதளம் மூலம் நிதி திரட்டுப்பட்டு வருகிறது. நிதி உதவி அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையத்தில் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.