\
ஜனவரி 21-ல் ஓடிடியில் வெளியாகும் ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’

ஜனவரி 21-ல் ஓடிடியில் வெளியாகும் ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’

ஜனவரி 21-ல் ஓடிடியில் வெளியாகும் ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’
Published on

ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது.

நடிகர் ஜி.வி பிரகாஷின் ‘பேச்சிலர்’ கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இப்படத்தினை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருந்தார். நாயகியாக திவ்யபாரதி நடித்திருந்தார். காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 45 நாட்கள் கடந்து வரும் ஜனவரி 21 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com