\
ஜி.வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.வி பிரகாஷின் ‘ஐங்கரன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ஜி.வி பிரகாஷின் ’ஐங்கரன்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ‘செல்ஃபி’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இரண்டாவதாக வெளியாகும் படம் ‘ஐங்கரன்’. அதர்வா முரளி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான் ‘ஈட்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரவி அரசு இயக்கியுள்ள இப்படம் கடந்த மே 5ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சில சிக்கல்களால் திடீரென்று ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், பிரிமியர் ஷோ பார்த்த அனைவரும் ‘ஐங்கரன்’ குறித்து பாசிட்டிவ் ரிவிவ் கொடுத்திருப்பதால், எதிர்பாப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த நிலையில், புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் மே 12 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று நடிகர் தனுஷ் அறிவித்து மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நீண்ட வருடங்களாக தயாரிப்பில் உள்ள இப்படத்தினை காமன் மேன் நிறுவனம் தயாரித்துள்ளது. மஹிமா நம்பியார் நாயகியாக நடித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com