கெளதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு நிறைவு

கெளதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு நிறைவு

கெளதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு நிறைவு
Published on

நடிகர் கெளதம் கார்த்திக்கின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

‘ஒரு கல்லூரியின் கதை’, ‘மாத்தியோசி’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமி தற்போது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கி வருகிறார். குடும்பக்கதையான இப்படத்தில் நடிகர் சேரன், ஷிவத்மிகா ராஜசேகர், பாடலாசிரியர் சினேகன், சரவணன், டேனியல் பாலாஜி, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, மௌனிகா, மைனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்,மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துள்ளனர் படக்குழுவினர். இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்துக்குமார் இசையமைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com