\
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on: 

நடிகர் ஃபகத் ஃபாசிலின் ‘மாலிக்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

மலையாள முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மாலிக்’ ஓடிடியில் வெளியாகும் என்று சமீபத்தில் வருத்தத்துடன் அறிவித்திருந்தார் நடிகர் ஃபகத் ஃபாசில். பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தை தியேட்டரில் எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால், இன்னும் கேரளாவில் தியேட்டர்கள் திறக்காததால் ஓடிடி வெளியீட்டிற்கு தள்ளப்பட்டோம் என்று விளக்கம் கொடுத்தது படக்குழு.

இந்த நிலையில், இன்று ’மாலிக்’ படம் வரும் ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் அறிவித்திருக்கிறார். பிரித்விராஜ் நடிப்பில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘கோல்ட் கேஸ்’ படத்தின் தயாரிப்பாளரும் இவரே.

ஏற்கனவே, இந்த ஆண்டில்  ஃபகத் ஃபாசிலின் ’இருள்’ நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும், ‘ஜோஜி’ அமேசான் பிரைமிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com