ஷூட்டிங்கில் கீழே விழுந்து பகத் பாசிலுக்கு காயம் - மருத்துவமனையில் சிகிச்சை!
நடிகர் பகத் பாசிலுக்கு ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டுள்ளதால், அவரது ரசிகர்களும் சினிமா துறையினரும் சோகத்தில் உள்ளனர்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான பகத் ஃபாசிலுக்கு தமிழிலும் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் ‘வேலைக்காரன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இயக்குநர் சஜிமோன் இயக்கத்தில் தற்போது மலையாளத்தில் ’மலையன் குஞ்சு’ என்ற படத்தில் பகத் நடித்து வருகிறார். இப்படத்தின் ஒரு காட்சிக்காக வீடு நீரில் மூழ்குவதுபோன்ற காட்சிக்காக செட்டிங் வீடு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த வீட்டிலிருந்து பகத் ஃபாசில் கீழே விழும்படி காட்சி எடுக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் மூக்கில் அடிப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்காக உடனடியாக எர்ணாகுளம் மருத்துவமனையில் பகத் சேர்க்கப்பட்டுள்ளார். ’லேசான காயம்தான். ஓய்வு தேவை’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை, தயாரிப்பது பகத்தின் அப்பா ஃபாசில் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாசில் தமிழில் ‘பூவே பூச்சூடவா’, ’என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ’காதலுக்கு மரியாதை’ போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை தமிழிலும் இயக்கியுள்ளார்.