\
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

துலகர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது புதிய வெளியீட்டுத் தேதியாக வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com