கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான்: ‘ஹே சினாமிகா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான்: ‘ஹே சினாமிகா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மான்: ‘ஹே சினாமிகா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருக்கிறது படக்குழு.

இந்தியாவின் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். அவரது, இயக்கத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்து முடித்துள்ளனர். மணிரத்னம் படங்களில் பிருந்தாதான் பெரும்பாலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் ’ஓகே கண்மணி’ படத்திலும் பணியாற்றினார். அதில், வரும் ‘ஹே சினாமிகா’ பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். மதன் கார்க்கி வரிகளில் துல்கர் சல்மான் ஒரு பாடலும் தமிழில் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாகர்ஜுனா-அமலா, சூர்யா -ஜோதிகா, ஃபகத் ஃபாசில் - நஸ்ரியா என நட்சத்திர தம்பதிகள் வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் கலர்ஃபுல் காஸ்டியூம்களில் துடிப்பான இளைஞர் ப்ளஸ் இளமையுடன் யாழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் கவனம் ஈர்க்கிறார். படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். துலகர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றியடைந்ததால் இப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com