34 வயதில்… இந்தி சீரியல் நடிகை கொரோனாவால் உயிரிழப்பு!

34 வயதில்… இந்தி சீரியல் நடிகை கொரோனாவால் உயிரிழப்பு!
34 வயதில்… இந்தி சீரியல் நடிகை கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தி சீரியல் நடிகை திவ்யா பாட்னகர்  இன்று அதிகாலை கொரோனாவால் உயிரிழந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 34 வயதிலேயே அவர் இறந்திருப்பது, அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

இந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளவர் திவ்யா பாட்னகர். இவருக்கு கடந்த நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்கெனவே இருந்ததால், கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 29 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்கூட ’நான் கொரோனாவிலிருந்து மீண்டுவர அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று சோகமுடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள்தான். அதற்கு, அதிகமாக இறப்பதும் முதியவர்கள்தான். இந்நிலையில், 34 வயதே ஆனா திவ்யா பாட்னகர் இறந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com