\
நடிகர் திலீப் குமார் மறைவு இந்திய சமூகத்திற்கு பேரிழப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

நடிகர் திலீப் குமார் மறைவு இந்திய சமூகத்திற்கு பேரிழப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

நடிகர் திலீப் குமார் மறைவு இந்திய சமூகத்திற்கு பேரிழப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
Published on

பிரபல பாலிவுட் நடிகரும், தாதா சாஹேப் பால்கே விருதை பெற்றவருமான திலீப் குமார் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் திலீப் குமார் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரைபிரபலங்களும் அரசியல்வாதிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியத் திரையுலகின் ஜாம்பவானும் திரை வழியே மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தவருமான நடிகர் திலீப் குமார் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்துக்குமே பேரிழப்பு. என்னுடைய சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com