\
துபாயில் ஓட்டல் திறப்பு விழா: பாஸ்போர்ட் கேட்டு திலீப் மனு

துபாயில் ஓட்டல் திறப்பு விழா: பாஸ்போர்ட் கேட்டு திலீப் மனு

துபாயில் ஓட்டல் திறப்பு விழா: பாஸ்போர்ட் கேட்டு திலீப் மனு
Published on

கேரள நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்புக்கு எதிராக வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பிடம் அண்மையில் விசாரணையை முடித்துள்ள அதிகாரிகள், இந்தத் தகவலை தெரிவித்தனர். இதற்கிடையே இம்மாத இறுதியில் துபாயில் நடைபெறவுள்ள ஓட்டல் திறப்பு விழாவில் பங்கேற்க வசதியாக தனது பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி நடிகர் திலீப் சார்பில் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com