நடிகை கடத்தி பாலியல் வன்முறை செய்யபட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை கேரள நீதிமன்றம் இன்று மீண்டும் தள்ளுபடி செய்தது.
பிரபல நடிகை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பபட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து மாஜிஸ்திரேட் அவரது காவலை வருகிற 2-ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் நடிகர் திலீப் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திலீப்புக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனுமீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டது.
அதன்படி, இன்று காலை ஜாமின் மனு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் திலீப்பின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே அங்கமாலி நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை ஜூலை 15-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.