\
தனுஷூக்கு சிறந்த இயக்குனர் விருது

தனுஷூக்கு சிறந்த இயக்குனர் விருது

தனுஷூக்கு சிறந்த இயக்குனர் விருது
Published on: 

இந்தி நடிகர் அமிர் கான், நடிகை அலியா பட், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு சங்கராபரணம் விருது வழங்கப்படுகிறது.

இதுபற்றி நடிகை துளசி கூறும்போது, ‘எனது குரு இயக்குனர் கே.விஸ்வநாத் பெயரில் விருது வழங்க முடிவு செய்தேன். அவர் இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியவர். அவர் பெயரில் விருது வழங்க முடிவு செய்தோம். இதற்கு ’சங்கராபரணம் விருது’ என்ற பெயரை சூட்டியுள்ளோம். கே.விஸ்வநாத் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான படம், ’சங்கராபரணம்’. அதனால் அந்த பெயரை சூட்டியுள்ளோம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி துறையினருக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த வருடம், ’தங்கல்’ இந்திப் படத்துக்காக அமிர் கான், ’உட்தா பஞ்சாப்’ படத்துக்காக அலியா பட், ’ப.பாண்டி’ படத்தை சிறப்பாக இயக்கியதற்காக தனுஷ், ’ஜனதா காரேஜ்’ என்ற தெலுங்கு படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com