செல்வராகவனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் இணையும் நடிகர் தனுஷ்

செல்வராகவனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் இணையும் நடிகர் தனுஷ்

செல்வராகவனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் இணையும் நடிகர் தனுஷ்
Published on

இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நடிகர் தனுஷ் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அதோடு, தனுஷ் நடித்துள்ள பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ வரும் 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்த நிலையில், தனுஷ் ‘ராக்கி’, ’சாணிக்காயிதம்’உள்ளிட்டப் படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இணையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது 1950 காலகட்டங்களில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. அருண் மாதேஸ்வரனின் முதல்படமான ‘ராக்கி’ வரும் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இரண்டாவது படமான ‘சாணிக்காயிதம்’ படத்தில் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம், ஓடிடியில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com