\
நடிகர் தனுஷின் ‘மாரி‘ படம் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷின் ‘மாரி‘ படம் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தனுஷின் ‘மாரி‘ படம் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

தனுஷ் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘மாரி’ படத்தின் தர லோக்கல் பாடல், யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் - காஜல் அகர்வால் நடித்து, கடந்த 2015-ம் ஆண்டு வெளியானப் படம் ‘மாரி’. தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ராதிகாவின் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்திருந்தது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றதற்கு, அனிருத்தின் இசையும் காரணம். ‘மாரி’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. குறிப்பாக டானு டானு பாடல் 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் மற்றொரு ஹிட் பாடலான தரலோக்கல் பாடல் யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதற்கு முன்பாக தனுஷின், ஒய் திஸ் கொலவெறிடி, டானு டானு, ரௌடி பேபி, மறுவார்த்தை உள்ளிட்ட பாடல்களின் வரிசையில், 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தனுஷின் ஐந்தாவது பாடல், தர லோக்கல். இதனால், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com