\
தனுஷின் ’நானே வருவேன்’ கதையையும், தலைப்பையும் மாற்றும் செல்வராகவன்?

தனுஷின் ’நானே வருவேன்’ கதையையும், தலைப்பையும் மாற்றும் செல்வராகவன்?

தனுஷின் ’நானே வருவேன்’ கதையையும், தலைப்பையும் மாற்றும் செல்வராகவன்?
Published on

செல்வராகவன் - தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தலைப்பும், கதையும் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வராகவன் – தனுஷ் கூட்டணி ’மயக்கம் என்ன’ படத்திற்கு அடுத்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு ’நானே வருவேன்’ படத்தில் இணைந்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரிப்பில் இப்படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் கதையும் தலைப்பும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட’நானே வருவேன்’ தயாரிப்பாளர் தாணுவுக்கு திருப்தியை தராததால் ‘புதுப்பேட்டை’ மாதிரி ஒரு தாதா கதையை உருவாக்கச் சொன்னதாகவும், பின்பு செல்வராகவன் கதையை மாற்றியிருப்பதோடு படத்திற்கு ‘ராயன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com