\
சுருளி எமோஜியா வந்துட்டாரு: ’ஜகமே தந்திரம்’ ட்விட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ள படக்குழு

சுருளி எமோஜியா வந்துட்டாரு: ’ஜகமே தந்திரம்’ ட்விட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ள படக்குழு

சுருளி எமோஜியா வந்துட்டாரு: ’ஜகமே தந்திரம்’ ட்விட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ள படக்குழு
Published on: 

தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படத்திற்காக ட்விட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ’ஜகமே தந்திரம்’  வரும் 18 ந்தேதி  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

கடந்த 1 ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்த்தன. சுருளி என்ற லண்டன் தாதாவாக நடித்துள்ளார் தனுஷ். இந்நிலையில், மீசை, கூலிங் க்ளாஸுடன்  ஸ்பெஷல் எமோஜியை இன்று வெளியிட்டுள்ளது டிவிட்டர். இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் தமிழில், விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ படத்திற்கு கடைசியாக ட்விட்டர் சிறப்பு  எமோஜி கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து, தற்போது ’ஜகமே தந்திரம்’ படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம், ட்விட்டர் எமோஜி பெற்ற முதல் தனுஷ் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது ’ஜகமே தந்திரம்’.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com