''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்!

''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்!
''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்!

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. 

அந்த வரிசையில் மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி, பவன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிராகாஷ் குமார் இசையமைக்கிறார். 

பூமணி எழுதிய ‘‘வெக்கை’’ நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தினை வி கிரியேஷன், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது. அதிரடி வசனங்கள், தனுஷின் மிரட்சியூட்டும் நடிப்பு என அசுரனின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ''நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ, ரூவா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது'' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

அசுரன் ட்ரெய்லரை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com