
தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
ஜவஹர் மித்ரனின் ‘திருச்சிற்றம்பலம்’,செல்வராகவனின் ‘நானே வருவேன்’, ‘வாத்தி’ பை-லிங்குவல் படங்களில் நடித்து வரும் தனுஷ் மாரி செல்வராஜ், ராம்குமார், அருண் மாதேஸ்வரன் இயக்கங்களில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். இதில், ‘நானே வருவேன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கினாலும் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்த படக்குழு சமீபத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரங்களில் நடிப்பதை உறுதி செய்து போஸ்டரை வெளியிட்டது.
அதோடு, செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவித்திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. இந்த நிலையில், தனுஷின் பாதி முகம் தெரியும்படி ஒரு போஸ்டரையும் செம்ம ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் மற்றொரு போஸ்டரையும் பகிர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.