\
தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டப் படக்குழு

தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டப் படக்குழு

தனுஷின் ‘மாறன்’ ட்ரெய்லருடன் ரிலீஸ் தேதியை வெளியிட்டப் படக்குழு
Published on: 

தனுஷின் ‘மாறன்’ படத்தின் ட்ரெய்லருடன் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் இருந்த படக்குழுவினர் தற்போது ட்ரெய்லருடன் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள்.

ட்ரெய்லரில் ஊடகத்துறையச் சேர்ந்தவராக கவனம் ஈர்க்கிறார் தனுஷ். மிரட்டல் வில்லனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். ’நாம் எழுதறது மக்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும்’ என்று இளவரசு சொல்ல “பிடிக்கிற மாதிரி இருக்கக்கூடாது சார். மக்களுக்கு உண்மையைக் கொண்டுபோய் சேர்க்கிற மாதிரி இருக்கணும்”, ”நாம எழுதறது உண்மை. யோசிக்கக்கூடாது” போன்ற அழுத்தமான வசனங்களும் காட்சிகளும் எதிர்பார்ப்பைக் கூட்டினாலும் ‘கோ’ படத்தினையும் நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com