சினிமா
‘மாறன்’: நடனத்தால் கவனம் ஈர்க்கும் தனுஷின் ‘பொல்லாத உலகம்’ பாடல்
‘மாறன்’: நடனத்தால் கவனம் ஈர்க்கும் தனுஷின் ‘பொல்லாத உலகம்’ பாடல்
தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ படத்தின் ’பொல்லாத உலகம்’ பாடல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு.
ஆரம்பத்தில் புல்லட்டில் செம்ம ஸ்டைலாக படுத்திருக்கும் தனுஷ், பாடலின் எண்டுவரை ஃபுல் எனர்ஜியுடன் ஆடி நடனத்தால் கவனம் ஈர்க்கிறார். நடனம் மட்டுமல்ல உடலையும் உற்றுநோக்க வைத்திருக்கிறார். கொஞ்சம் எடையைக் கூட்டி ஃபிட்டாக காட்சியளித்து ‘குட்’ சொல்ல வைக்கிறார்.
விவேக் எழுதியுள்ள இப்பாடலை தனுஷும் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து பாடியுள்ளனர்.