\
’அண்ணன தாலாட்டும்’: தனுஷின் ‘மாறன்’ இரண்டாவது பாடல் வெளியீடு

’அண்ணன தாலாட்டும்’: தனுஷின் ‘மாறன்’ இரண்டாவது பாடல் வெளியீடு

’அண்ணன தாலாட்டும்’: தனுஷின் ‘மாறன்’ இரண்டாவது பாடல் வெளியீடு
Published on: 

தனுஷின் ‘மாறன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இப்படத்தின், முதல் பாடலான ‘பொல்லாத உலகம்’ குடியரசு தினத்தையொட்டி வெளியான நிலையில், இன்று ’அண்ணன தாலாட்டும்’ பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

அண்ணன் தங்கை பாசத்தை உருக்கமுடன் வெளிப்படுத்தும் இப்பாடலை கவிஞர் விவேக் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். தனுஷுக்கும் ஸ்மிருதி வெங்கட்டுக்கும் இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் இப்பாடலுக்கு அனுராக் குல்கர்னியின் குரல் பலம் சேர்த்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com