\
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் தனுஷ் இணையும் ‘வாத்தி’

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் தனுஷ் இணையும் ‘வாத்தி’

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் தனுஷ் இணையும் ‘வாத்தி’
Published on

நடிகர் தனுஷின் இரண்டாவது பான் இந்தியா படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் முதல் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், தற்போது இரண்டாவதாக நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

‘வாத்தி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ’தொழி பிரேமா’, ‘மிஸ்டர் மஜ்னு’, ’ரங் தே’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். இவரின் ’தோழி பிரேமா’ படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தனுஷுடன் வெங்கி அட்லூரி இணையும் ’வாத்தி’ படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

மித்ரன் ஜவகரின் ‘திருச்சிற்றம்பலம்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, செல்வராகவனின் ‘நானே வருவேன்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக, மாரி செல்வராஜ், ராம்குமார் படங்களில் நடிக்கவிருக்கிறார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com