இவ்ளோ ஸ்பீடாவா?: நாளை வெளியாகும் ’தனுஷ் 44’ படத்தின் டைட்டில்

இவ்ளோ ஸ்பீடாவா?: நாளை வெளியாகும் ’தனுஷ் 44’ படத்தின் டைட்டில்
இவ்ளோ ஸ்பீடாவா?: நாளை வெளியாகும் ’தனுஷ் 44’ படத்தின் டைட்டில்

’தனுஷ் 44’ படத்தின் தலைப்பு நாளை வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின், படப்பிடிப்புகள் நாளை முதல் துவங்குகின்றன. இந்த நிலையில், படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நாளை மாலை 6 மணிக்கு ’தனுஷ் 44’ படத்தின் டைட்டில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அதேசமயம், இன்று ஒரே நாளில் ’தனுஷ் 44’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், நாளை படத்தின் டைட்டிலை வெளியிடப்போகிறோம் என்று அறிவித்ததும்,’’இவ்ளோ ஸ்பீடா டைட்டில் அறிவிக்கிறீங்களே?.. நாங்க அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் கேட்கிறோம்’... ‘பீஸ்ட்’, ’எதற்கும் துணிந்தவன்’ அப்டேட்டுக்களை கேட்டு காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ‘இந்தப் படத்துக்கு மட்டும் இவ்ளோ அப்டேட்டுகளா’ என்று அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள், ரஜினி, விஜய், சூர்யா ரசிகர்கள்.  

ஏற்கனவே, மித்ரன் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்டப் படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com