கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தனுஷ்

கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தனுஷ்

கீதாஞ்சலி செல்வராகவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தனுஷ்
Published on

செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் தனுஷ் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி செல்வராகவன் நேற்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார் செல்வராகவன். கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கீதாஞ்சலி.

இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தனது 35 வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார் கீதாஞ்சலி செல்வராகவன்.

அந்தக் கொண்டாட்டத்தில், நடிகர் தனுஷ், செல்வராகவன், தனுஷ் அக்கா, கீதாஞ்சலி தங்கை நடிகை வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் புகைப்படங்களை உற்சாகமுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் கீதாஞ்சலி.

செல்வராகவன் குழந்தைகளுடன் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் கவனம் ஈர்க்கின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com