\
கார்த்திக் நரேனுடன் தனுஷ்: ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘டி43’

கார்த்திக் நரேனுடன் தனுஷ்: ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘டி43’

கார்த்திக் நரேனுடன் தனுஷ்: ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘டி43’
Published on

’தனுஷ் 43’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ’தனுஷ் 43’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில், நடித்துக்கொண்டிருக்கும்போதே, ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் ‘கர்ணன்’ வெளியானது, சமீபத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியானது. ஆனால், இப்படங்களின் புரோமோஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை.

தற்போது, ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால்,  ‘தனுஷ் 43’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் வந்துள்ளார் தனுஷ். இந்த நிலையில், தற்போது ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி ஃபிலிம்ஸ், இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com