சினிமா
''சுருளி விரைவில் வருகிறான்'' - தனுஷ் வெளியிட்ட கலக்கல் போஸ்டர்
''சுருளி விரைவில் வருகிறான்'' - தனுஷ் வெளியிட்ட கலக்கல் போஸ்டர்
வடசென்னை, அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் பேட்ட திரைப்படத்தை இயக்கிய பிறகு தனுஷுடன் இணைந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் டி40 என்ற பெயரிலேயே வழங்கப்பட்டு வந்தன.
இப்படத்தில் தனுஷ் வேட்டி சட்டையுடன் கையில் அரிவாள் வைத்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு வைரல் ஆனது. ஜகமே தந்திரம் என பெயரிடப்பட்ட இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மோஷன் போஸ்டரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் மற்றுமொரு போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில் கதாபாத்திரத்தின் பெயரான சுருளியைக் குறிப்பிட்டு சுருளி விரைவில் வருகிறான் என குறிப்பிட்டுள்ளார். இந்தப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என படக்குழு குறிப்பிட்டுள்ளது.

