முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த நடிகர் சிரஞ்சீவி

முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த நடிகர் சிரஞ்சீவி

முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த நடிகர் சிரஞ்சீவி
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அடுத்ததாக, மோகன் ராஜா இயக்கத்தில் ‘லூசிஃபர்’ ரீமேக்கில் நடித்து வருகிறார். முன்னதாக, சிரஞ்சீவியின் தம்பியும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கலயாண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டுத் தெரிவித்திருந்த நிலையில், அவரது அண்ணன் நடிகர் சிரஞ்சீவி இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருக்கிறார்.

அவருடன் உதயநிதி ஸ்டாலினும் வரவேற்று பேசினார். இந்தப் புகைப்படத்தை திமுக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com