நடிகர் சீனு மோகன் காலமானார் !

நடிகர் சீனு மோகன் காலமானார் !

நடிகர் சீனு மோகன் காலமானார் !
Published on

இறைவி, மெர்சல், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்த 'சீனு மோகன்' மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 61. இவர் 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்தவர்

'கிரேசி' மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் மோகன். இவர் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திர பெயரில் நடிப்பதால் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார். 1979 இல் கிரியேஷன்ஸ் நாடகக் குழு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடக்கக்குழு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அக்குழுவில் நடித்து வந்தார் சீனு மோகன். நாடகத்தில் இருந்து மெல்ல சினிமாவிலும் முகம் காட்டத் தொடங்கினார். அஞ்சலி, தளபதி, வருஷம் 16 உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தார். 

நாடகங்களை தொடர்ந்து 'கிரேசி' மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தது. அந்த தொடர்களிலும் நடித்தார் சீனு மோகன். மேலும் பல குறும்படங்களிலும் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அவர், அதன் பிறகு ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, ஸ்கெட்ச், வடசென்னை, மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

இதுவரை 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த சீனு மோகனை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக சீனு மோகன் காலமானார். அவருக்கு வயது 61. அவரது மறைவுக்கு திரையுலகினரும், நாடக நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com