\
ஆஸ்ட்ரோ த்ரில்லரில் உருவாகியுள்ள பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

ஆஸ்ட்ரோ த்ரில்லரில் உருவாகியுள்ள பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்

ஆஸ்ட்ரோ த்ரில்லரில் உருவாகியுள்ள பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : கவனம் ஈர்க்கும் ட்ரெய்லர்
Published on

நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வரும் மார்ச் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

கைரேகை நிபுணராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபாஸ் கவனம் ஈர்க்கிறார். சூத்திரதாரியாக நடிகர் அமிதாப் பச்சன் குரல் கொடுத்திருப்பது, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ்கள், இத்தாலி, ஜார்ஜியா மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ள அழகிய காட்சிகள். பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேக்கு இடையேயான காதல் போன்றவை ட்ரெய்லரிலேயே காட்டப்பட்டு எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com