\
கவனம் ஈர்க்கும் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ டீசர்

கவனம் ஈர்க்கும் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ டீசர்

கவனம் ஈர்க்கும் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ டீசர்
Published on

நடிகர் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ பட டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

பாபி சிம்ஹா நடிப்பில் கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி படத்தின் ‘மிராக்கிள்’ வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது, ‘777 சார்லி’, ‘வசந்த முல்லை’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ’777 சார்லி’ டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இன்று ‘வசந்த முல்லை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ரமணன் புருஷோத்தம்மன் இயக்கி இருக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டீசரில் நினைவுகளை மறந்து நீரில் விழுந்துக்கிடக்கும் பாபி சிம்ஹாவுக்கு ஹீரோயின் காஷ்மீரா முத்தம் கொடுத்தவுடன் நினைவு வந்து துரத்துகிறார். வித்தியாசமாக இருக்கும் டீசர், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ‘வசந்த கோகிலா’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com