\
ட்விட்டர் ட்ரெண்டில் பரத்தின்‘காளிதாஸ்’

ட்விட்டர் ட்ரெண்டில் பரத்தின்‘காளிதாஸ்’

ட்விட்டர் ட்ரெண்டில் பரத்தின்‘காளிதாஸ்’
Published on

ட்விட்டர் ட்ரெண்டில் பரத் நடித்துள்ள ‘காளிதாஸ்’ ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் இடம் பிடித்துள்ளது.

இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்கும் திரைப்படம் ‘காளிதாஸ்’. இதில்  நடிகர் பரத் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் “பரத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதை மிக மகிழ்ச்சியாக கருதுகிறேன். அவரையும் அவரது படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். பரத்திற்கு சிறப்பான படமாக இது அமையட்டும்” என்றும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி கார்த்தி டார்லிங்... ” என மறுமொழி இட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார். அதற்கு கார்த்தி ‘நன்றி டார்லிங்’ என கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com