லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.
நாளைய இயக்குநர் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்ரீசெந்தில். இவருடன் சக போட்டியாயராக கலந்து கொண்டவர்கள் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன். இவர்களின் வரிசையில் செந்திலும் வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார். இவரது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு சுரேஷ் பாலா. வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் இருவரிடமும் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் இவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
படத்தைப் பற்றி ஸ்ரீசெந்தில், இது சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகிறது. பரத் இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகியை தேடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளியன்று வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் சிவநேசன் தெரிவித்திருத்தார்.