30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த 'ராசுக்குட்டி' ஜோடி - ஹீரோ யாரு?

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த 'ராசுக்குட்டி' ஜோடி - ஹீரோ யாரு?

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த 'ராசுக்குட்டி' ஜோடி - ஹீரோ யாரு?
Published on

நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு நடிகர் பாக்யராஜும் நடிகை ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘ஆகாஷ்வாணி’ வெப் சீரிஸுக்குப் பிறகு நடிகர் கவின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘ஊர்குருவி’ படத்திலும் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, சூப்பர் ஹிட் அடித்த ‘மனம் கொத்தி பறவை’, ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தினை, ’கடாரம் கொண்டான்’, ‘இரை’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கணேஷ் கே பாபு இயக்குகிறார்.

நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவின் உடன் அபர்ணாதாஸ், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 5 ஆம் தேதி முதல் துவங்கி சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் பாக்யராஜும் நடிகை ஐஸ்வர்யாவும் கவினுக்குப் பெற்றோர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடி கடந்த 1992 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘ராசுக்குட்டி’ படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது, 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கவின் படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு, எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பைக் கையாள்கிறார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும், சுகிர்தா பாலன் ஆடை வடிவமைப்பாளராகவும், அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக ஏபிவி மாறன் பணியாற்றுகிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com