தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’

தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’

தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’
Published on

நடிகர் பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.

பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அகண்டா’ உலகம் முழுக்க வசூலை குவித்தது. கொரோனா சூழலிலும் ஆந்திரா, தெலங்கானாவில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் தெறிக்கவிட்டு மாஸ் காட்டியது. இதுவரை ரூ.200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது. போயபதி சீனு இப்படத்தினை இயக்கியிருந்தார். ஏற்கனவே, ’லெஜெண்ட்’, ‘சிம்ஹா’ உள்ளிட்டப் படங்களில் இணைந்த போயபதி சீனு-பாலகிருஷ்ணா கூட்டணி மூன்றாவது முறையும் ஹாட்ரிக் வெற்றி கொடுத்து தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது.

இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றி இருந்ததால், கடந்த ஜனவரி 21 ஆம் தேதி முதல் ஹாட்ஸ்டாரில் ’அகண்டா’ ஒளிபரப்பானது. ஆனால், தெலுங்கில் மட்டுமே கிடைத்த இப்படத்தைப் பார்த்து தமிழ் ரசிகர்களும்  ரசித்து பாராட்டினார்கள். இந்த நிலையில், ‘அகண்டா’ படத்தினை தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழில் டப்பிங் செய்து வெளியிடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com