“எனது மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்” - போலீஸ் எஸ்.ஐ மீது நடிகர் பாலாஜி புகார்

“எனது மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்” - போலீஸ் எஸ்.ஐ மீது நடிகர் பாலாஜி புகார்
“எனது மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கிறார்” - போலீஸ் எஸ்.ஐ மீது நடிகர் பாலாஜி புகார்

தனது குடும்பத்திற்கு தொல்லை கொடுக்கும் காவல் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என்பவர் மீது நகைச்சுவை நடிகர் பாலாஜி சென்னை கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் மனோஜ்குமார் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தொல்லை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இன்று காவல்நிலையம் வந்த மனோஜ் குமார் மற்றும் பாலாஜி ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி, “நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ. மனோஜ்குமார் விசாரணைக்கு வந்தார். என்னிடமும் விசாரணை நடத்தினார்கள். காவல்துறையை சேர்ந்த ஒருவர் தவறு செய்தால் இடமாற்றம் மட்டும் தான் செய்வார்கள். அப்படியில்லாமல் கண்டிப்பாக, மனோஜ் குமாருக்கு பணி நீக்கமோ அல்லது பதவி உயர்வு தடை செய்யக்கூடிய அளவிற்கு தண்டனையோ கொடுக்க வேண்டும். நான் வணங்கும் மூக்குபொடி சித்தர் அவருக்கு தண்டனை கொடுக்காமல் விடமாட்டார். என் மனைவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருகிறார். இதனால் நாங்கள் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் எனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com