இந்த மூன்றாண்டு காலத்தில் நடிகர் சங்கம் நல்ல நிலைக்கு வந்திருக்கிறது என்று நடிகர் சங்கத் தலைவர் நடிகர் நாசர் சொன்னார்.
நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, கூறியதாவது:
இது முக்கியமான பொதுக்குழு. எங்கள் மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக்குழுவோடு நிறைவு பெறுகிறது. எங்களின் ஒரே நம்பிக்கை, இந்த சங்கத்தை வழி நடத்துவது. இந்த சங்கத்தின் மாற்றம் இந்த அரங்கில்தான் நடைபெற்றது. நிர்வாகத்தை கையில் எடுத்தபோது நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற அடிப்படை உணர்வு இருந்தது. அது மறுக்கப்பட்ட நிலையில் தீ பிளம்பாக இல்லாமல் ஒளி சுடராக மாறியது. இந்த அரங்கு வழக்கம் போல் இங்கே தான் நடக்கும். ஆனால் நாங்கள் முதல் முறையாக பொதுக்குழு நடத்தும்போது மறுக்கப்பட்டது. லயோலா கல்லுரியில் நடத்தப்பட்டது. அது பெரும் விழா போல் காணப்பட்டது. இரண்டாம் பொதுக்குழு பாதி ஏற்பாடு செய்த நிலையில் நட்ட நடு இரவில் மறுக்கப்பட்டது. நான் அரசியல் பேசவில்லை. இவர்கள் நினைத்தால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரலாம். இவர்களில் செயலை, நான் பார்த்திருக்கிறேன். எட்டு மணி நேரத்தில் ஒரு குளிர்சாதன கூடாரம் அமைத்து பாரம்பரியமான கூட்டம் நடத்தினார்கள். நான் மோற்பார்வை பார்த்ததில் யாரும் சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அப்படி நடை பெற்றது. இது நெகிழ்வான பொதுக்குழு. நான் எந்த நிலையில் இந்த அரங்கத்தை விட்டு கடைசியாக சென்றேனோ, அதற்கு நேர் எதிராக மன நிறைவோடு இந்த அரங்கத்தை பார்க்கிறேன். பூச்சி முருகனை கடைசி பொதுக்குழுவில் உள்ளே வர வேண்டாம் என்றேன். இப்பொழுது நீங்கள் மேடையில் உர்க்காந்து இருக்கீங்க. உங்களுக்கு மகிழ்ச்யான்னு தெரியல. எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்த மூன்றாண்டு காலத்தில் ஒரு நிலைக்கு நாம் எல்லோரும் வந்துவிட்டோம். எங்களுக்கு எதிரிகள் இருந்ததே கிடையாது. அப்படி ஒரு வார்த்தை எங்கள் அகராதியில் இல்லை. கைகோர்த்து நின்றவர்கள், , வாழ்த்தியவர்கள் எதிர்ப்புரை வழங்கினார்கள். ஆனால் எதிப்பவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஏனேனில் அவர்கள் எங்களை மறைமுகமாக பலமாக்கினார்கள். எப்படி எதிர் கொள்வது என ஆசிரியர்களாக நின்று கற்றுக்கொடுத்தனர். நாங்கள் எங்கள் சுயநலத்திற்காக வரவில்லை.
இவ்வாறு நாசர் பேசினர்.