சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்

சந்திரஹாசன் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்
Published on

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ’நடிகர் சங்கத்தின் அறங்காவலர் கமல்ஹாசனின் இரண்டாவது சகோதரர் சந்திரஹாசன் லண்டனிலுள்ள அவரது மகள் அனுஹாசனின் இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வேதனையடைந்தோம். பால்யகாலம் முதல் கமலஹாசனுக்கு வழிகாட்டியாக, உறுதுணையாக, அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்து வந்தவர் சந்திரஹாசன். எனவே தான் அவரை தனது மூத்த சகோதரர் என்றில்லாமல் அப்பா என்றே எப்போதும் குறிப்பிடுவார். அப்பேர்ப்பட்ட அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறோம். அவரது இழப்பால் வாடும் கமலஹாசன், முத்த சகோதரர் நடிகர் சாருஹாசன் மற்றும் அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com