\
நடிகர் சங்கக் கட்டடம்: இடைக்கால தடை நீக்கம்

நடிகர் சங்கக் கட்டடம்: இடைக்கால தடை நீக்கம்

நடிகர் சங்கக் கட்டடம்: இடைக்கால தடை நீக்கம்
Published on: 

நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. 

சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக, ஸ்ரீரங்கன், அண்ணாமலை ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அதன் விசாரணையில் கட்டுமானப்பணி மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆக்கிரமிப்பு புகார் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் அறிக்கையில், நடிகர் சங்க கட்டடத்திற்காக ஆக்கிரமிப்புகள் ஏதும் நிகழவில்லை என குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து, பலமுறை சந்தர்ப்பம் அளித்தும் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டை மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை எனக்கூறி நடிகர் சங்க கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீதிபதிகள் நீக்கினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com